இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை: ஜனவரி 20-ல் பேச்சுவார்த்தை நடக்குமா?- பேச்சுக்கு முன் மீனவர்களை விடுவிக்க முயற்சி

By ஆர்.ஷபிமுன்னா

இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுடனான பேச்சு வார்த்தை ஜனவரி 20-ல் நடத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக இருநாட்டு சிறைகளிலும் இருக கும் மீனவர்களை விடுவிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

இதை ‘தி இந்து’விடம் உறுதி செய்த மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், “பேச்சு வார்த்தைக்கு முன்பாக நல்லெண் ணம் கருதி தமிழகம் மற்றும் ஆந்திர சிறைகளில் இருக்கும் இலங்கை மீனவர்களை விடுவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல், இலங்கை யின் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களையும் அதன் அரசு விடுவிக்கும் என நம் மத்திய அரசு ஆவலுடன் எதிர்பார்க்கிறது” என்றார்.

இந்த விடுதலையை, தமிழர் கள் திருநாளான பொங்கல் தினத்திற்குள் செய்யவும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய சுதர்சன நாச்சியப்பன், ‘இந்த கூட்டத்தை நடத்த இருப்பது தமிழக அரசுதான். இதில், இலங்கை யிலிருந்து வருபவர்களுக்கு விசா அளிப்பது போன்ற உதவிகளை மட்டுமே மத்திய அரசு செய்து வருகிறது.

இந்தக் கூட்டத்திற்கு, தமிழக அரசு அளித்த ஒத்துழைப் பின் அடிப்படையில்தான், மத்திய அரசு முழு முயற்சியும் செய்து வருகிறது.’ எனக் கூறினார்.

இந்த கூட்டம் குறித்து வெளி யுறத்துறை அதிகாரிகள் கூறிய தாவது:

இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் உள்ளிட்ட 4 அமைச்சர்கள், நான்கு உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மீனவர்கள் சார்பில் ராமேஸ் வரம், புதுக்கோட்டை, நாகபட்டி னம், தஞ்சாவூர், காரைக்கால் மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவ பிரதி நிதிகள் 6 பேர் பங்கேற்பர். இதற் கான தகவல் சம்பந்தப்பட்ட மீனவர் களுக்கு இன்னும் அனுப்பப்பட வில்லை என்றனர்.

பதிலளிக்காத இலங்கை

ஜனவரி 20-ல் கூட்டம் உறுதியாக நடக்குமா எனத் தெரியவில்லை. இலங்கை அரசு கூட்டம் தொடர் பாக எவ்வித பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து மத்திய வெளியுறத்துறை துணை செயலாளர் மயாங் ஜோஷி கூறுகையில், “இந்த கூட்டத்திற் கான ஏற்பாடுகள் அனைத்தும் தயா ராகி விட்டதாக தமிழக அரசு தெரி வித்துள்ளது.

இதை இலங்கை அரசுக்கு தெரி வித்து உள்ளோம். அவர்களிடம் இருந்து இன்னும் பதில் வர வில்லை. அது விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம். இது பற்றி நீங்கள் இலங்கையில் தூதரகத்தில்தான் கேட்க வேண்டும்” என்றார்.

சமீபத்தில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமல் புறக் கணித்ததால், இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா மீது கடும் கோபத்தில் உள்ளார்.

அதை, தணிக்கும் வகை யிலும், இருநாட்டு மீனவர்களுக் கான பேச்சுவார்த்தைக்கு அந்நாட்டு அரசை தூண் டும் வகையிலும்தான் இந்திய சிறைகளில் இருக்கும் இலங்கை மீனவர்களை விடுவிக்கும் நட வடிக்கைகள் தொடங்கியுள்ள தாகக் கூறப்படுகிறது.

இலங்கையில் உள்ள சிறை களில் தமிழகம் மற்றும் புதுச் சேரி மீனவர்கள் 313 பேர் உள்ளனர். அதேபோல், தமிழகம், ஆந்திரா மற்றும் ஒரிசா சிறைகளில் சுமார் 200 இலங்கை மீனவர்கள் இருப்ப தாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்