தீவிரவாதிகளின் சதியை முறியடிக்க வேண்டும்: படை தளபதிகளுக்கு அறிவுறுத்தல்

By பிடிஐ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியாக சட்டசபை தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தீவிரவாதிகளின் சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டும் என படைத் தளபதிகளை ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ராணுவ படைத் தளபதிகளுக்கான மாநாட்டில் கலந்துகொண்ட தல்பீர் சிங் சுஹாக் பேசியதாவது:

வடகிழக்கு மாநிலங்களில் இப்போது பாதுகாப்பு நிலைமை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. அதேநேரம் பிரச்சினை ஏதேனும் இருந்தால் அதற்கு உரிய தீர்வு காண்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.

நமது அண்டை நாட்டில் (ஆப்கானிஸ்தான்) பாதுகாப்புப் பணி கைமாற உள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலையை படைத் தளபதிகள் தொடர்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அமைதியாக தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் தேர்தலை சீர்குலைக்கும் தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்க முடியும் என்றார்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர், பாதுகாப்புப் பணியை அந்த நாட்டு ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு நாடு திரும்ப தயாராகி வரும் நிலையில் சுஹாக் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, “இராக்கைப் போல ஆப்கனில் உள்ள நேட்டோ படையை முற்றிலுமாக வாபஸ் பெற்றால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என அந்நாட்டு அரசை எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்