7-வது நாளாக தேடுதல் பணி தீவிரம்
‘மாயமான ஏஎன்-32 விமானத்தை தேடும் பணி தொடர்கிறது. இதுவரை உறுதியான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை’ என, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
சென்னை, தாம்பரத்தில் இருந்து கடந்த 22-ம் தேதி அந்தமானுக்குப் புறப்பட்டு, நடுவழியில் மாயமான விமானப்படையின் ஏஎன்-32 விமானத்தை தேடும் பணியில், இந்திய கடலோர பாதுகாப்புப் படை, கடற்படை மற்றும் விமானப் படையினர், தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் ஈடுபட்டிருந்தனர்.
விமானப் படை, கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 11 விமானங் கள், 13 கப்பல்கள், 4 ஹெலிகாப் டர்கள் மற்றும் ஒரு நீர்மூழ்கி கப்பல் ஆகியவை கடல் பரப்பின் மீதும், கடலுக்கு அடியிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
தேடப்படும் பகுதிக்கு அப்பால் உள்ள பகுதிகளை, அந்தமான் நிகோபாரில் உள்ள ராணுவப் படையினர் கண்காணித்து வருகின்றனர். அத்துடன், ‘ரிசாட்’ செயற்கைகோள் உதவியுடன் பதிவு செய்யப்படும் படங்களும், ‘இஸ்ரோ’விடம் இருந்து பெறப் பட்டு ஆராயப்படுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலான நிலவரப்படி, தேடுதல் வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில், 28 முறை ராணுவ விமானங்கள் சென்றுவந்துள்ளன. 17 கப்பல்கள் இரவும், பகலும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப் பட்டன. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத பெரிய அளவிலான தேடுதல் பணியாக இது கருதப்படுகிறது.
எனினும், ஏஎன்-32 விமானம் என்னவானது, அதில் பயணித் தவர்களின் கதியென்ன என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. வங்கக் கடல் பரப்பில் சந்தேகத்துக்கு இடமான சில பொருட்கள் தென்பட்டதாக, பாது காப்பு அமைச்சர் பாரிக்கர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
கப்பல் மற்றும் விமானம் மூலம் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தியதில், உபயோகமான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். மக்களவையில் நேற்று இதுதொடர் பாக அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியதாவது:
மாயமான ஏஎன்-32 விமானத்தை தேடும் பணி தொடர் கிறது. இதுவரை உறுதியான தடயங்கள் ஏதும் கிடைக்க வில்லை. முழுக்க உள்நாட்டி லேயே தயாரிக்கப்பட்ட ‘கார்டோசாட்’ 2ஏ மற்றும் 2பி செயற்கைக்கோள்களை பயன் படுத்தி, 27க்கு 27 கிமீ சுற்றளவுப் பகுதி ஆய்வு செய்யப்படுகிறது.
0.8 மீட்டர் அளவிலான தெளிவுடன்(ரெசல்யூஷன்) கூடிய பதிவுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம், 3 இடங்களில் எண்ணெய் இழை, 4 தொலைத்தொடர்பு சமிஞ்சைகள் மற்றும் 22 மிதக்கும் பொருட்கள் குறித்த தகவல்கள் கிடைத்தன.
விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் சம்பந்தப்பட்ட இடங் களுக்குச் சென்று, முழுமையாக ஆராயப்பட்டது. எனினும், இது வரை உபயோகமான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago