பத்திரிகையாளர்களுக்கு பத்து லட்சம் ரூபாயில் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிஹார் மாநில அரசு அறிவித்துள்ளது. வரும் 20-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள இந்த திட்டத்தால் சுமார் 3,000 பேர் பயன்பெறுவார்கள்.
பிஹார் அரசின் 2014-ம் ஆண்டின் விபத்துக் காப்பீட்டு திட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரையும், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அதே அளவு தொகையும் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் பத்திரிகையாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட அம் மாநில அரசின் மக்கள் தொடர்புத் துறை செயலாளர் பிரத்தியா அம்ரீத் கூறுகையில், "இந்தத் திட்டம் தலைநகர் பாட்னா மற்றும் பிற மாவட்டங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பொருந்தும். இதற்காக, நேஷனல் இன்ஷுரன்ஸ் நிறுவனத்திடம் பிஹார் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது" என்றார்.
இந்த திட்டத்துக்கான ஓராண்டு பிரிமியம் ரூ.8,970. இதில் 80 சதவீதத்தை (ரூ.7,176) அரசும் 20 சதவீதத்தை (ரூ.1,794) பத்திரிகையாளர்களும் செலுத்த வேண்டியிருக்கும். இதை பத்திரிகையாளர்கள் மாதந்தோறும் 150 ரூபாய் வீதமும் செலுத்தலாம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
19 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago