நான் நிரபராதி - நீதிபதியிடம் முறையிட்ட லாலு
கால்நடைத் தீவன வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் உள்பட 37 பேருக்கான தண்டனை விவரத்தை சிபிஐ சிறப்பு நீதிபதி பிரவாஸ் குமார் சிங் விடியோ கான்பரன்ஸ் மூலம் வியாழக்கிழமை அறிவித்தார். லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது, ராஞ்சி சிறையிலிருந்து விடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதியிடம் முறையிட்ட லாலு, நான் நிரபராதி, என் மீது பொய் வழக்குப் புனையப்பட்டுள்ளது என்றார்.
இதே வழக்கில் ராஞ்சி சிறையில் உள்ள ஐக்கிய ஜனதா தள எம்.பி., ஜெகதீஷ் சர்மாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டது. அப்போது, விடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதியிடம் முறையிட்ட அவர், "நான் குற்றமற்றவன்" என்று கூறினார்.