மாட்டிறைச்சி உணவு பரிமாற மறுத்து திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்

By ஏஎன்ஐ

திருமணத்தின்போது கண்டிப்பாக மாட்டிறைச்சி உணவு பரிமாற வேண்டும் என மாப்பிள்ளை வீட்டார் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்து திருமணத்தையே பெண் வீட்டார் நிறுத்தி விட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தரியாகார்க் கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருமணத்தின்போது விருந் தினர்களுக்குக் கண்டிப்பாக மாட்டிறைச்சி உணவு வகைகளைச் சமைத்துப் பரிமாற வேண்டும் என மாப்பிள்ளை வீட்டார் கூறியுள்ள னர்.

ஆனால் மாட்டிறைச்சி உணவு பரிமாற முடியாது என பெண் வீட்டார் உறுதியாக இருந்தனர். இதற்கு மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக்கொள்ளாததால் வேறு வழியின்றி திருமணத்தையே நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு பெண் வீட்டார் தள்ளப்பட்டனர்.

இதுபற்றி மணப்பெண்ணின் தாய் கூறுகையில், ‘திருமணத்தின் போது மாட்டிறைச்சி உணவு பரிமாற வேண்டும் எனவும், கார் வாங்கித் தருமாறும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, திருமணம் நிறுத்தப்பட்டது. மாட்டிறைச்சிக்கு அரசு தடை விதித்துள்ளபோது, எப்படி அந்த உணவுகளைப் பரிமாற முடியும்?’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்