மும்பையில் சல்மான் கான் வீட்டுக்கு எதிரே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By ஐஏஎன்எஸ்

ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததைக் கண்டித்து, பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு எதிரில் சீமானின் 'நாம் தமிழர்' கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சமீபத்தில் இலங்கை சென்ற சல்மான் கான், அங்கு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ராஜபக்சவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இதை கண்டிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி, சல்மான் கான் வீட்டைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் சல்மான் கானின் செயல்பாடு இருக்கிறது என்றும், தமிழர்களிடம் அவர் மன்னிப்புக் கோரும் வரை போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அதேவேளையில், இந்தப் போராட்டம் குறித்து பாந்ரா காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரை பிடித்து வைத்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

பாலிவுட் நடிகையும் இலங்கையைச் சேர்ந்தவருமான ஜாக்குலின் பெர்ணான்டஸ் அழைப்பை ஏற்று சல்மான் கான் இலங்கை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.​

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்