பிரதமர் மோடி வருகையை எதிர்த்து ஸ்டிரைக்: காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து பிரிவினைவாத சக்திகள் விடுத்த ஸ்டிரைக் போராட்ட அழைப்பு காரணமாக ஸ்ரீநகரிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியிலும் வியாழக்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிப்புக் குள்ளானது.

போராட்டம் காரணமாக ஸ்ரீநகரில் அரசு பஸ்கள் இயங்க வில்லை. எனினும் தனியார் வாகனங்களும் ஆட்டோக்களும் குறைவான எண்ணிக்கையில் இயங்கியதாக அதிகாரிகளும் பொதுமக்களும் தெரி வித்தனர். உலகின் மிக உயர்ந்த போர்க்களமாக திகழும் சியாச்சினுக்கு சென்று படைவீரர்களை சந்தித்து விட்டு தீபாவளியை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி உள்ள ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுடன் இணைந்து கொண்டாட மோடி வியாழக்கிழமை ஸ்ரீநகர் வந்தார். அவரது வருகையையொட்டி மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரிவினைவாதிகளின் ஸ்டிரைக் போராட்ட அழைப்பு காரணமாக ஸ்ரீநகரில் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் திறக்கப்படவில்லை.

ஸ்ரீநகர் முழுவதிலும் பெரும் எண்ணிக்கையில் போலீஸாரும் பாதுகாப்புப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அடையாள அட்டையை காட்டும்படி மோட்டார் வாகனங் களிலும் செல்வோர் போலீஸாரால் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

சாலைகளில் நடந்து செல்வோர் ஆங்காங்கே போலீஸ் சோதனைக்கு உள்ளானார்கள்.

காஷ்மீரில் உள்ள முஸ்லிம் களுக்கு ஈத் வாழ்த்து தெரிவிக் காமல் தவிர்த்த மோடி தீபாவளியை கொண்டாட காஷ்மீர் வருவது வெந்த புண்ணில் வேல்பாய்ச் சுவது போல் இருப்பதாக பிரிவினை வாத தலைவர் சையது அலி ஷா கிலானி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட மனித உயிரிழப்பு விவகாரத்தையும் அரசியலாக்கும் வகையில் மோடியின் இந்த பயணம் அமைந்திருப்பதாக ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பு தலைவர் யாசின் மாலிக் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE