டெல்லியில் வாழும் உகாண்டா பெண்களை பாதுகாக்க வலியு றுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதனால், சர்ச்சைக்குள்ளான சட்ட அமைச்சரின் மாளவியா நகர் திடீர் சோதனை, அவருக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளது.
கடந்த மாதம் 15-ம் தேதி இரவு, மாளவியா நகரின் கிட்கி கிராமப் பகுதியில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் போதை மருந்து வியாபாரத்துடன் விபச்சாரமும் செய்வதாக புகார் வந்ததை அடுத்து, டெல்லி சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பாரதி அங்கு நேரில் சென்றார். தன்னு டன் இருந்த மாளவியாநகர் போலீ ஸாரிடம் சோதனை நடத்தும்படி கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த போலீஸார், வலுவான ஆதாரம் இல்லாமல் இதைச் செய்ய முடியாது என மறுத்துள்ளனர். இதுகுறித்து, அவர்களுடன் சட்ட அமைச்சர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அங்கிருந்த உகாண்டா பெண்களிடம் இன வெறியை தூண்டும் வகையில் நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து, பாரதி மீது வழக்குப் பதிவு செய்யுமாறு இரண்டு உகாண்டா பெண்கள் டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் செய்தனர். இதனால், அமைச்சர் பாரதி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, அந்த மூன்று உகாண்டா பெண்களும் ஆம் ஆத்மி கட்சியிடம் உதவி கேட்டு வந்தனர். தங்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி டெல்லிக்கு அழைத்து வந்த ஒரு கும்பல் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் தங்களை தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து, 'தி இந்து' விடம் சோம்நாத் பாரதி கூறுகையில், "நான் அன்று சொன்னபடி டெல்லி போலீசார் சோதனை நடத்தி யிருந்தால் அந்தப் பெண்களை விபச்சாரத்தில் இருந்து காப்பாற்றி இருக்கலாம். இப்போது அவர் கள் தங்களின் தூதரகம் அல் லது டெல்லி போலீஸார் என இரு தரப்பையும் அணுகாமல் எங்களி டம் வந்துள்ளதை வைத்து நீங்கள் பிரச்சனை என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்" என்றார்.
மேலும், இதுதொடர்பான புகாரில் பெயர் தெரியாத நால்வர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் டெல்லி அரசின் சார்பில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மத்திய வெளியுறத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் பாரதி தெரிவித் தார். இந்தப் பிரச்சினையை தற்போது டெல்லி போலீஸாருக்கு எதிராகக் கையில் எடுத்த ஆம் ஆத்மி கட்சியினர், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இதில் மாளவியா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது, டெல்லி போலீஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையே, இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள ஆம் ஆத்மி சார்பில் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சர்ச்சை கிளம்பியது. இதற்கான அறிவிப்பு கொடுத்த ஒரு பிரபல இணையதளம், டெல்லி வாசிகளிடம் வசூலும் செய்யத் தொடங்கியதாகக் கூறப்பட்டது.
இந்தப் பிரச்சினை ஆம் ஆத்மி கட்சியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அது தலையிட்ட பின் அந்த இணையதளம் செயல் படவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago