உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் விவகாரம் நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே இழுபறியாக இருந்துவருகிறது. தற்போதுள்ள கொலீஜியம் நடைமுறையை ஏற்க மத்திய அரசு மறுத்து வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அதற்கு மாற்றாக புதிய நடைமுறையை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, அதில் உடன்பாடு ஏற்படாமல் நிலுவையில் உள்ளது. இடைப்பட்ட காலகட்டத்தில் கொலீஜியம் முறைப்படி மேற் கொள்ளப்பட்ட நீதிபதிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளை மத்திய அரசு ஏற் காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்நிலையில், நீதிபதிகள் நியமனம் தொடர்பான அனில் கபோத்ரா மற்றும் வழக்கறிஞர் அஸ்வானி உபாத்யாயா ஆகியோர் தொடர்ந்த பொதுநல மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அவர் தலைமைநீதிபதியாக பொறுப்பேற்ற பின் இந்த வழக்கு முதன்முறையாக விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. அப்போது வழக்கறிஞர் மேத்யூ நெடும்பாரா என்பவர், கொலீஜியத்தின் தலைவராகவும் தலைமை நீதிபதியே இருப்பதால் இந்த வழக்கில் இருந்து ஜே.எஸ்.கேஹர் விலக வேண்டும் என்று கோரினார். அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, இப்போது எதற்கெடுத்தாலும் அந்த நீதிபதி விலக வேண்டும், இந்த நீதிபதி விலக வேண்டும் என்று கேட்பது வாடிக்கையாகி விட்டது. இந்த கோரிக்கையை ஏற்க முடியாது. சட்டத்தை நிலைநாட்டுவோம் என்று கூறி வழக்கை தொடர்ந்து விசாரித்தார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘இது நீதித்துறையும் அரசும் பேசித் தீர்க்க வேண்டிய விவகாரம். நீதிமன்றத்தில் வழக்காக எடுத்து விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டிய விஷயமல்ல. எனவே, நீதிபதிகள் நியமன விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப் பட்டுள்ள பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கோரினார்.
இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, நீதித்துறையை காப்பதற்காக தொடரப்பட்டுள்ள வழக்குகள் இவை. இதை விசா ரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு விட்டுவிட்டு ஓடி விட முடியாது. முழுமையாக விசாரித்து தீர்ப்புசொல்வோம். உச்ச நீதிமன்றம் தெரிவித்த வரைவு திட்டம் தாமதமாவதன் காரணத்தையும், நீதிபதிகள் நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளது ஏன் என்பதையும் மத்திய அரசு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
மேலும், வழக்கறிஞர் அஸ்வானி உபாத்யாயா வாதிடும் போது, அகில இந்திய நீதித் துறை ஆட்சிப் பணியை புதிதாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அதுகுறித்து வழக்கின் அடுத்த விசாரணையின்போது பரிசீலிக் கப்படும் என்று தெரிவித்து வழக்கை அடுத்த மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago