ராஜ்நாத் சிங்கின் முசாபர்நகர் பயணம் ரத்து

By செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் கலவரம் பாதித்த முசாபர்நகரை பார்வையிடவிருந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தனது பயணத்தை இன்று ரத்து செய்தார்.

முசாபர்நகர் மாவட்ட மேஜிஸ்திரேட் குஷால் ராஜ் சர்மா கேட்டுக்கொண்டதன்படி, அவர் தனது பயணத்தை ரத்து செய்ததாக பாஜக தெரிவித்துள்ளது.

அத்துடன், முசாபர்நகர் கலவரம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ் ராணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜ்நாத் சிங்கின் பயணம் பதற்றத்தை அதிகரிக்கலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாவும் இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதாவும் தனது பயணத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

முசாபர்நகரில் கடந்த 7-ம் தேதி நடந்த கலவரத்தில் 48 பேர் உயிரிழந்ததும், 43 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்