தயாநிதி, கலாநிதி மாறன் சொத்துகளை விடுவிக்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு

By எம்.சண்முகம்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ள தயாநிதி, கலாநிதி மாறனின் சொத்து களை விடுவிக்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் சிபிஐ சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று ஆஜராகி, சிபிஐ நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரினார். அதற்கு நீதிபதிகள் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணு கும்படி கூறினர். இந்த வழக்கின் தொடர்ச்சியாக முடக்கி வைக்கப் பட்ட ரூ.742.58 கோடி சொத்து களை விடுவிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், தயாநிதி, கலாநிதியின் பிணை யத்தை ஏற்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.

குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று கூறி விசாரணை நீதிமன்றம் விடுவித்த பிறகு இத்தகைய உத்தரவுக்கு என்ன அவசியம் என்று நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு அரசு வழக்கறிஞர், இன்னும் வழக்கு முடியவில்லை. சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதால், சொத்துகளை விடுவிக்க தடை விதிக்க வேண்டும் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்று கூறி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டால், அதுதான் இறுதி தீர்ப்பு. அதற்கு மேல் அந்த வழக் கில் ஒன்றுமில்லை என்று குறிப் பிட்டனர். அப்போது சிபிஐஎல் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்த வழக்கின் அனைத்து மனுக்களும் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு மேல்முறையீடு செய்யாவிட்டால், நாங்கள் மேல்முறையீடு செய்வோம். எனவே, இந்த வழக்கு இன்னும் முடியவில்லை என்றார்.

வழக்கின் அடுத்த விசா ரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் தனது தரப்பு கோரிக்கையை நாளைக்குள் (சனிக்கிழமை) மனு வாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்