சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகரும் கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சருமான அம்பரீஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டுள்ளது.
சிறுநீரகக் கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த பிப்ரவரி 21-ம் தேதி பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் அம்பரீஷ் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் பிப்ரவரி 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து வென்டி லேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து அவருக்கி சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் சதீஷ் வியாழக்கிழமை 'தி இந்து'விடம் பேசுகையில், "அம்பரீஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
அதனால் அவருக்கு அளிக் கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் வியாழக்கிழமை காலை அகற்றப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து பொதுப் பிரிவுக்கு மாற்றப்படுவார். எனவே அம்பரீஷ் விரைவில் வீடுதிரும்புவார்" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago