முத்கல் குழு விசாரணை தகவல்கள் அடங்கிய ஒலி நாடாவை தங்களிடம் வழங்கக் கோரிய பிசிசிஐ மனு மீதான விசாரணை ஏப்.16-க்கு ஒத்திவைத்துள்ளது.
ஐபிஎல் சூதாட்டம், மேட்ச் பிக்சிங் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த முத்கல் குழு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, பிசிசிஐ தலைவராக இருந்த என்.சீனிவாசன், ஐபிஎல் தலைமை செயல்பாட்டு அதிகாரி சுந்தர் ராமன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.
அப்போது இந்த விசாரணையின்போது அவர்கள் கூறிய தகவல்கள் அடங்கிய ஒலி நாடாவை தங்களிடம் வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் சூதாட்ட புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய் யப்பனுக்கு சூதாட்டத்தில்று உள்ள தொடர்பு குறித்த விவரங்களை முத்கல் குழுவிடம் தெரிவிக்காமல் தோனி மறைத்து பொய்களைக் கூறியுள்ளார் என்று இந்த வழக்கில் பிஹார் கிரிக்கெட் சங்கம் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே ஏற்கெனவே குற்றம்சாட்டியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago