கேஜ்ரிவாலுக்கு புதிய தலைவலி: தலைமைச் செயலக அலுவலர்கள் போராட்ட எச்சரிக்கை

By ஆர்.ஷபிமுன்னா

தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்தால், காலவரையற்ற போராட்டத்தை மேற்கொள்வோம் என்று கேஜ்ரிவால் அரசுக்கு டெல்லி தலைமைச் செயலக அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியின் தலைமைச் செயலக அலுவலர்களிடம் இருந்து, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு புதிய தலைவலி உண்டாக இருக்கிறது. இவர்கள், தம் பிரச்சனைகளை பேச சந்திக்கவில்லை எனில், காலவரையற்ற போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசால் பரிந்துரைக்கபட்ட ஆறாவது ஊதியக் கமிஷனை உடனடியாக அமுல்படுத்துவது உட்பட பல கோரிக்கைகளுக்காக டெல்லியின் தலைமைச் செயலக அலுவலர்கள் கேஜ்ரிவாலை சந்திக்க முயன்று வருகின்றனர். இதற்காக மூன்று முறை சந்திக்க முயன்றும் முடியாமல் போய் உள்ளது.

இதனால், கடும் கோபத்திற்குள்ளான அதன் அலுவலர்கள் சங்கங்கள், கேஜ்ரிவால் தமக்கு நேரம் ஒதுக்கவில்லை எனில், பிப்ரவரி 11 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கடந்த 11 ஆம் தேதி முதல் நூற்றுக்கணக்கான ஆசிரியர், செவிலியர் மற்றும் மருத்துவத்தின் ஒப்பந்த ஊழியர்கள், தலைமைச் செயலகம் முன்பாக 'ஆம் ஆத்மி இங்கே? கேஜ்ரிவால் எங்கே?' என கோஷமிட்டு ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.

இவர்களை, தாம் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வதாக சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தார் கேஜ்ரிவால். இதனால், அவர்களும் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்காக டெல்லி தேர்தலில் பிரச்சாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

1 day ago

மேலும்