கடந்த பல நாட்களாக ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நம் ராணுவத்தை திசை திருப்பி, தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சி என உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இது குறித்து மத்திய உளவுத் துறை வட்டாரத்தில் விசாரித்த போது, “பாகிஸ்தான் ராணுவத் தினர் மிகவும் திட்டமிட்ட முறையில் சர்வதேச எல்லைக்கோட்டில் போர் ஒப்பந்த அத்துமீறல் செய்வதற்கு உள்நோக்கம் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் பனிப் பொழிவு தொடங்கிவிடும் என்ப தால் அடுத்த மூன்று மாதங் களுக்கு தீவிரவாதிகளால் ஊடுருவ முடியாது. எனவே, அதற்கு முன்பாக அவர்கள் நுழைய ஏதுவாக நம் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தி இந்திய ராணுவத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறது” எனத் தெரிவித்தனர்.
இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் கடந்த ஒரு மாதத்தில் எல்லையில் ஊடுருவ முயன்ற சுமார் 20 தீவிரவாதிகள், நம் ராணுவத்தினரால் சுட்டுக் கொல் லப்பட்டனர். கடந்த வருடமும் ஜம்முவின் சாம்பா மற்றும் ஆர்.எஸ்.புரா வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் பெரிய அளவிலான தாக்குதல் நடத்த முயன்றது முறியடிக்கப்பட்டது.
கடந்த 2011-ம் ஆண்டு எல்லையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப் பாது காப்பு வளையம் வீரர்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், குளிர்காலங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் ஊடுருவ முடிவதில்லை. இதனால், ஊடுருவல் முயற்சிகள் வெகு வாகக் குறைந்து 2011-ல் பூஜ்ஜிய மாகவும் 2012-ல் 2 மற்றும் 2013-ல் 5 என்றாகி விட்டது.
பாகிஸ்தானில் இருந்து 250 தீவிரவாதிகள் ஜம்மு எல்லைகள் வழியாகவும், வடக்கு காஷ்மீர் வழியாக 400 தீவிரவாதிகளும் ஊடுருவக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்களில் இருந்து நன்கு பயிற்சி பெற்ற சுமார் ஆயிரம் தீவிரவாதிகள் ஊடுருவக் காத்திருப்பதாகவும் உளவுத்துறையின் சார்பில் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago