ஒரே மேடையில் மன்மோகன், மோடி!
சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவுச் சங்கம் சார்பில் இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தின்சா படேல் இந்தச் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
திறப்பு விழா அழைப்பிதழில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமை விருந்தினராகவும் முதல்வர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்பார்கள் என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் தின்சா பட்டேல் முதல்வர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழும் வழங்கியுள்ளார். இருவேறு துருவங்கள்...
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
மன்மோகன் சிங் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் நோயாளியாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது, பிரதமர் பதவிக்கு அவர் தகுதியானவரே இல்லை என்று மோடி கூறியுள்ளார். அதேபோல் பிரதமர் மன்மோகன் சிங்கும் தனது வழக்கமான மெளனத்தைக் கலைத்துவிட்டு மோடிக்கு எதிராக கண்டன கணைகளை வீசி வருகிறார்.
சில நாள்களுக்கு முன்பு பேட்டி யளித்த பிரதமர், மக்களவைத் தேர்த லில் மோடிக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் கைகோக்கும் என்றார். இந்தப் பின்னணியில் இருவேறு துருவங்கள் ஒரே மேடையில் அமர்வார்களா என்ற எதிர்பார்ப்பு எல்லாரிடமும் மேலோங்கியுள்ளது.