சமூக வலைத்தள சர்ச்சை: ட்விட்டர் இந்தியாவின் புதிய தலைவர் மோடி எதிர்ப்பாளரா?

By செய்திப்பிரிவு

காஷ்மிரைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், இணையதள ஆர்வலருமான ரஹீல் குர்ஷித், டிவிட்டர் குழுமத்தின் இந்தியப் பிரிவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு பல விதமான எதிர்ப்புகளையும், வாதங்களையும் சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளன.

வலது சாரி ஆதரவாளர்கள், டிவிட்டரின் இந்த நியமனத்தை கண்டித்துள்ளனர். குர்ஷித், மோடி எதிர்ப்பாளர் என்றும், பிரிவினையை ஆதரிப்பவர், இந்துக்களை எதிர்ப்பவர் என்றும் கூறி, அந்தப் பதவியிலிருந்து அவரை நீக்கவும் கோரிக்க விடுத்துள்ளனர். இன்னும் ஒரு பிரிவினரோ இந்தத் தேர்வை வரவேற்றுள்ளனர்.

பல எதிர்ப்பாளர்கள், change.org என்கிற தளத்தின் மூலம், இணையத்தில் இந்த தேர்வுக்கு எதிரான மனுவை பலரிடம் அனுப்பி ஆதரவு திரட்டி வருகின்றனர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் குர்ஷித் change.org இணையதளத்தின் தொலைத்தொடர்பு இயக்குனராகதான் இது நாள் வரையிலும் இருந்தார்.

இந்த மனு, பாஜகவைச் சேர்ந்தவர்களால் தொடங்கப்பட்டாத என அக்கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, கட்சி இதுவரை அப்படியான அதிகாரப்பூர்வ புகாரை எதுவும் டிவிட்டர் குழுமத்திடம் கொடுக்கவில்லை எனவும், இணையத்தில் மனு எதையும் தொடங்கவில்லை எனவும் கூறினார். குரிஷித்-இன் தேர்வைப் பற்றிய புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட இணையதளம்தான் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு என பெயரிடப்பட்டுள்ள அந்த மனுவில் இன்றும மாலை 7 மணி வரை, 2923 மனுதாரர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டதாவது:

"டிவிட்டரின் செய்தி, அரசியல் மற்றும் அரசாங்கப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.குரிஷித்தை அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். மனுதாரர்களுக்கு திரு. குரிஷ்தின் திறமைகளப் பற்றிய எந்த குற்றச்சாட்டுகளும் இலை. ஒரு குறிப்பிட்ட கட்சியனரை ஆதரிக்கும் அவரது அரசியல் சார்பும், இதற்கு முன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கைகளை வைத்தும் பார்க்கும் போது, அவரது கடமையில் அவர் நடுநிலமை வகிப்பார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை எல்லை. பல வருடங்களாகவே, பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை அவர் எதிர்த்து வருகிறார். மோடியைக் கொலைகாரர் என்றும் அழைத்துள்ளார்" என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோடிக்கு எதிராக குர்ஷித் பதிவு செய்த ட்வீட் ஒன்றும் இந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இதோடு, திரு. குர்ஷித், காஷ்மீர் பிரிவினைவாதிகளை ஆதரித்தவர், இந்துக்களைப் பற்றி கேலியாகப் பேசியவர், ஒரு மாத்தத்திற்கு முன்பு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருடன் சேர்ந்து வலது சாரி பத்திரிக்கையாளர் ஒருவரை எதிர்த்துள்ளார் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த சார்பும் இல்லாமல், நடுநிலையாக செயல்பட்டு, மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உதவுவதால்தான் ட்விட்டர் மக்களிடையே பிரபலமானது. குர்ஷித் இந்த பதவிக்கு வந்தால், ஆளும் காங்கிரஸின் கையில் அந்தத் தளம் இருப்பது போல. ட்விட்டரின் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே குறைந்து விடும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்