சிறையில் கைதிகள் அரசை சவுதாலா அமைக்கலாம்: முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கிண்டல்

By பிடிஐ

‘இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா டெல்லி திஹார் சிறையில் கைதிகள் அரசை உருவாக்கலாம்’ என்று ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.

ஜாமீனில் வெளியில் இருந்த சவுதாலா ஹரியாணா சட்டசபை தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் மீண்டும் திஹார் சிறையில் அடைக் கப்பட்டார். அவர் நிருபர் களிடம் கூறியபோது, திஹார் சிறையில் இருந்து கொண்டே ஹரியாணா முதல்வராக பொறுப்பேற்பேன் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அந்த மாநில காங்கிரஸ் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கூறியதாவது:

ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சவுதாலா சட்டசபை தேர்தலில்கூட போட்டியிட முடியாது. ஆனால் அவர் முதல் வராவேன் என்று கனவு காண்கிறார்.

அவரது முதல்வர் ஆசை நிறைவேற என்னிடம் சிறந்த யோசனை உள்ளது. திஹார் சிறையில் உள்ள கைதிகளிடம் பொதுத்தேர்தல் நடத்தி அங்கு அவர் புதிய அரசை அமைக்கலாம். கைதிகளைக் கொண்டே அமைச்சரவையை உருவாக்கி சிறையில் அரசு நடத்தலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்