பிஹாரில் சிஆர்பிஎப் கோப்ரா பிரிவு வீரர்களை குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய ஐஇடி வகை வெடி குண்டு தாக்குதலில் 10 வீரர்கள் பலியாகினர்.
பிஹார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் வனப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டை நடைபெற்றபோது சிஆர்பிஎப் கோப்ரா பிரிவு வீரர்களை குறிவைத்து நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர்.
ஐஇடி வகை வெடிகுண்டுகளைக் கொண்டு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 10 வீரர்கள் மரணமடைந்தனர்.
வெடிகுண்டு தாக்குதலையும் மீறி சில வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே சுமார் 8 மணி நேரம் சண்டை நீடித்தது.
இத்தாக்குதல் குறித்து காவல்துறை கூடுதல் டிஜிபி சுனில் குமார் கூறும்போது, "அவுரங்காபாத் - கயா பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் சிஆர்பிஎப் கோப்ரா படைப்பிரிவினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்களைக் குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய ஐஇடி வகை வெடிகுண்டு தாக்குதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த வீரர்கள் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்.
நக்சல் தாக்குதலில் வீர மரணமடைந்த, காயமடைந்த வீரர்கள் அனைவரும் சிஆர்பிஎப் கோப்ரா படைப் பிரிவின் 205-வது படாலியனைச் சேர்ந்தவர்களாவர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago