விமான நிலையத்தில் தகராறு செய்து சர்ச்சையில் சிக்கிய தெலுங்கு தேசம் எம்.பி. வெளிநாடு சென்றார்

By என்.மகேஷ் குமார்

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. திவாகர் ரெட்டி திடீரெனவெளிநாட்டிற்குச் சென்று விட்டார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஜே.சி. திவாகர் ரெட்டி, ஹைதராபாத்திற்கு செல்ல கடந்த 15-ம் தேதி விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்தார்.

தாமதமாக வந்ததால் இவரை விமானத்தில் பயணம் செய்ய ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த எம்பி, அங்கிருந்த கம்ப்யூட்டர் பிரிண்டரை உடைத்தார். இதனால் 7 விமான நிறுவனங்கள் திவாகர் ரெட்டியை தங்களது விமானத்தில் பயணம் செய்யத் தடை விதித்தன.

இது குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திவாகர் ரெட்டி, தனது குடும்பத்தினருடன் திடீரென ஹைதராபாத்திலிருந்து வெளிநாட்டிற்குச் சென்று விட்டார்.

இந்த விவகாரத்தில் விமான நிலைய ஊழியர்களிடம் மன்னிப்புக் கேட்குமாறு திவாகர் ரெட்டியை, அக்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு அவர் ஒப்புக் கொள்ளாமல் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளதாக அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது. தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, திவாகர் ரெட்டி மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்