தெற்கு மும்பையில், அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
மவுன்ட் பிளான்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் தீ பிடித்தது. 12-வது தளத்தில் குடியிருந்த வைர வியாபாரியும், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளருமான தினேஷ் காந்தி என்பவரது வீட்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன.
அப்போது, அந்த வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததே தீக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் அருகில் இருந்த பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த கட்டத்தில் தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்ததால் தீ அடுத்தடுத்த கட்டங்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago