பெங்களூரில் சிறுமி பலாத்காரம்: பள்ளி முன்பு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

By ரேணுகா, வெ.சந்திரமோகன்

பெங்களூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளிக்கூடத்தின் முன் பெற்றோர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரின் ஜாலஹள்ளியில் உள்ள ஆர்கிட் பள்ளியில் 3 வயது குழந்தையை பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், எந்தவித முன்அனுமதியின்றி பள்ளி இன்று திறக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பள்ளியின் முன்பு போரட்டம் திரண்ட பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, சர்ச்சைக்குள்ளான அந்த பள்ளியில் சிசிடிவியில் பதிவான ஆதாரத்தின் அடிபடையில் அப்பள்ளியின் அலுவலக உதவியாளர் குண்டப்பாவையும்(42), விதிமுறைகளை மீறி பள்ளியை நடத்தி வந்ததற்காக நிர்வாகியான கே.ஆர்.கே. ரெட்டியும் கைது செய்யப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அவர்களை பெங்களூரு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். குண்டப்பாவை 6 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.

அப்பள்ளியின் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில். எந்தவித நடவடிகைகளுமின்றி பள்ளியை திறந்தது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் கடந்த 3 மாததில் 4 குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் பதுவாகியுள்ளது பெற்றோரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்கிட் பள்ளி சிறுமி பலாத்கார சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் கே.சித்தாராமையா, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்