வட இந்திய செவிலியர்களைக் காட்டிலும் கேரளா செவிலியர்கள் மிகவும் கறுப்பாக இருக்கிறார்கள் என கிண்டலாக இழிவுபடுத்தி பேசிய விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குமார் விஸ்வாஸ் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் குமார் விஸ்வாஸ்(43) சிறந்த பேச்சாளராக மட்டு மல்லாமல் இந்தி மொழி கவிஞராக வும் உள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அக்கட்சி யின் முக்கிய செய்தி தொடர்பாளரா கவும் அவர் நியமிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
இந்நிலையில், குமார் விஸ்வாஸ் கடந்த 2008-ம் ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற 'கவி சம்மேளனில் (கவியரங்கம்)' ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அந்த கூட்டத் தில், "கேரள செவிலியர்கள் மிகவும் கறுப்பானவர்கள். இதனாலே அவர்களை 'சிஸ்டர்' என்று அழைக் கின்றோம். ஆனால் வட இந்திய செவிலியர்கள் மிகவும் அழகான வர்கள்" என்று கிண்டலடிக்கும் விதமாக பேசியுள்ளார். இந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி 'யூ டியூப்'-பில் சமீபத்தில் வெளியானது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கேரள செவிலியர் சங்கத் தினர் மட்டுமில்லாமல் மகளிர் அமைப்புகளும் விஸ்வாஸைக் கண்டித்து அறிக்கைகள் வெளி யிட்டதுடன் ஆர்ப்பாட்டத்திலும் குதித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை கொச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்ற அம்மாநில இளைஞர் காங்கிரஸார் ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
இதுமட்டுமில்லாமல் கேரளா முழுவதிலும் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகங்கள் மகளிர் அமைப்புகளால் கடுமையாக தாக்கப்பட்டன. மேலும் கேரளாவை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.ஜே.அல்போன்ஸ் மனித உரிமைக்கு எதிராக பேசிய குமார் விஸ்வாஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.
கொதித்த உம்மன் சாண்டி
இதுதொடர்பாக, கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதினார். அதில் குமார் விஸ்வாஸ் கேரள செவிலியர்கள் குறித்து கூறிய கருத்துக்கள் கேரள மக்களை மிகவும் காயப்படுத்தியுள்ளது. உடனடியாக அவர் தனது கருத்துக்களை திரும்ப பெற வேண்டும். அத்துடன் பகிரங்க மன்னிப்பு கேட்க அறிவுறுத்த வேண்டும் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப், குமார் விஸ்வாஸின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மீது ஆம் ஆத்மி கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கேரள நர்ஸ்கள் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் கேரளா முழுவதும் பெரும்புயலை கிளப்பியதைத் தொடர்ந்து குமார் விஸ்வாஸ் புதன்கிழமை மன்னிப்பு கோரினார்.
அவர் வெளியிட்டுள்ள மன்னிப்பு கடிதத்தில், சாதி, மதம், மாகாணம், வர்க்கம், இனம், மொழி போன்ற பேதங்களை தான் துளியும் ஏற்றுக்கொண்டதில்லை. 'கவி சம்மேளன்' நிகழ்ச்சியில் தான் பேசிய பழைய வீடியோவைப் பார்த்து சிலரது மனம் புண்பட்டதாக அறிகிறேன்.
நான் யாரையும் வேண்டும் என்றே புண்படுத்தியதில்லை. எனது வார்த்தைகள் யார் மனதையாவது காயப்படுத்தி இருந்தால், இதயப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கேரள மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் கே.பி.ராதேஷ் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், "கேரள பெண்களையும் செவிலியர்களையும் ஆம் ஆத்மி பெரிதும் மதிக்கிறது. அவர்களுடைய சேவையை உணர்ந்திருக்கிறது. எனவே கடந்த காலத்தில் ஏற்பட்ட சிறு தவறை மன்னிக்க வேண்டுகிறேன்" என்றார்.
கடுமையான நடவடிக்கை தேவை
இதுதொடர்பாக, கேரள மகளிர் ஆணைய தலைவி லிஸ்ஸி ஜோஸ் கூறுகையில், "பட்டம் படித்து பேராசியராக பணியாற்றிய குமார் விஸ்வாஸ் இப்படி பேசியிருப்பது மன்னிக்க முடியாத குற்றம். அவரைப் போன்ற அருவருப்பான ஆட்களை வைத்துக்கொண்டு மாற்று அரசியல் பேச ஆம் ஆத்மிக்கு அருகதை இல்லை.
குறைந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு இரவு பகலாக சேவை செய்துவரும் கேரள நர்ஸ்களை இழிவாக பேசியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் மட்டுமில்லாமல் குமார் விஸ்வாஸின் பல்வேறு கவிதைகள் பெண்களை இழிவுபடுத்துவது போன்றும் ஆபாச வக்கிர மனம் கொண்டதாகவும் இருக்கிறது. எனவே அவர் மீது வழக்கு தொடுக்க திட்டமிட்டு இருக்கிறோம்''என்றார்.
குமார் விஸ்வாஸ் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் சிக்குவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே திருநங்கைகள் குறித்தும் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்தும் பேசி சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உத்திரபிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்பு இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசியதால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago