நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. தலைமறைவு நிலையிலேயே ஓய்வுபெறும் முதல் நீதிபதி என்ற நிலை கர்ணனுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவரும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன் சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாக கூறி, அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. விசாரணைக்கு ஒத் துழைக்காததால், அவரை கைது செய்யும்படி தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல் கத்தா போலீஸாருக்கு உத்தரவிட் டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, இன்றோடு 35 நாட்கள் ஆகிவிட்டது. தலைமறைவாக இருப்பதால் அவரை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களையும் உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிபதி கர்ணன் 12.6.1955-ல் பிறந்தவர். உயர் நீதிமன்ற நீதிபதி யின் பதவிக்காலம் 62 வயது. அவருக்கு நேற்று 11-ம் தேதியுடன் 62 வயது பூர்த்தியாகிவிட்டதால், அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிந்துவிட்டது.
வழக்கமாக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர்களுக்கு அந்த மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள், பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பணி நிறைவு விழா நடத்தப்படும். இந்த மரியாதை எதுவும் இன்றி, நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப் பட்டபோது, நீதிபதி கர்ணனுக்கு தண்டனை வழங்க மூத்த வழக் கறிஞர் கே.கே.வேணுகோபால் எதிர்ப்பு தெரிவித்தார்.
நீதிபதி ஒருவரை பணிக்காலத் திலேயே கைது செய்தோம் என்ற களங்கம் வர வேண்டாம். அவர் ஓய்வுபெறும் வரை பொறுத்திருந்து அதன்பிறகு அவருக்கு தண்டனை வழங்கலாம் என்று பரிந்துரை செய்தார். ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அந்த பரிந்துரை தற்போது உண்மையாகும் வகையில், நீதிபதியாக இருந்தவரை கர்ணன் கைது செய்யப்படவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago