ஆந்திராவில் நடந்த சர்வதேச யோகா தினத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்தார்.
விஜயவாடாவில் நடந்த இந்நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது:
நமது முன்னோர்கள் நமக்காக வழங்கிய அற்புத கலைதான் யோகா. மனதை தூய்மையாக வும், அமைதியாகவும் வைத்துக் கொள்ள யோகா உதவுகிறது. எனவே ஜாதி, மத பேதமின்றி அனைவரும் யோகா கற்க முன் வரவேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் யோகா கட்டாய பாடமாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். இதே போன்று திருப்பதி இந்திரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தில் மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரி பங்கேற்று யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். மேலும் அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடந்த யோகா நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ, மாணவியர் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
தெலங்கானாவின் ஹைதரா பாத் நகரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் நரசிம்மன், அவரது மனைவி, அமைச்சர்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களும், மாணவ, மாணவியரும் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago