ராகுல் பேச்சு காங்கிரஸ் விரக்தியின் அடையாளம்: வெங்கய்யா நாயுடு விமர்சனம்

ராகுலின் பேச்சு, காங்கிரஸ் கட்சியின் விரக்தியை காட்டுகிறது என பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சுருவில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, என் பாட்டியும் தந்தையும் கொல்லப்பட்டது போல நானும் கொல்லப்படுவேனோ என அச்சமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு: ராகுலின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு, காங்கிரஸ் விரக்தியின் அடையாளம் என விமர்சித்துள்ளார். மேலும் அக் கட்சியின் குழப்பமான மற்றும் நம்பிக்கையற்ற தன்மையையும் உணர்த்துவதாக கூறியுள்ளார்.

அனுதாப அலைகளை கிளப்பி வாக்கு சேகரிக்க காங்கிரஸ் முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை சமாளிக்க முடியாமல் காங்கிரஸ் குழப்பத்தில் இருக்கிறது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE