மக்களவைத் தலைவர் மீரா குமாரை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் அவரது உறவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு முன் பாக அக்கட்சி சார்பில் வேறொரு வர் மனு தாக்கல் செய்துவிட்டார்.
பிஹாரின் ரிசர்வ் தொகுதியான சாசாராமில் காங்கிரஸ் வேட் பாளராக 3-வது முறையாக போட்டியிடுகிறார் மீரா குமார். இவரை எதிர்த்து போட்டியிட முடிவுசெய்த அவரது சகோதரர் மகள் மேஹதாவி கீர்த்திக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வாய்ப்பு அளித்தது.
இதையடுத்து கடந்த வியாழக் கிழமை மனுதாக்கல் செய்யச் சென்ற கீர்த்திக்கு அதிர்ச்சி காத்தி ருந்தது. அவருக்கு முன்பாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாலேஷ்வர் பாரதி என்பவர் மனு தாக்கல் செய்து விட்டார். இதனால், கீர்த்தியின் மனுவை ஏற்க சாசாராம் மாவட்ட தேர்தல் அதிகாரி மறுத்து விட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கீர்த்தி போராட்டத்தில் ஈடுப்பட் டதை தொடர்ந்து அவரது மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டார். எனினும் அவரை பகுஜன் சமாஜ் வேட் பாளராக ஏற்று அக்கட்சியின் யானைச் சின்னம் ஒதுக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் கீர்த்தி சுயேச்சை யாகத்தான் போட்டியிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பகுஜன் சமாஜின் பிஹார் மாநில பொதுச் செயலாளர் பிரமோத் பப்புசிங் செய்தியாளர்களிடம் கூறுகை யில், “கட்சித் தலைமை உத்தர வின்படி கடந்த 19-ம் தேதி கீர்த்தி மனு தாக்கல் செய்ய வரவில்லை. இதனால் அவருக்கு போட்டியிட விருப்பம் இல்லை எனக் கருதி, அவருக்கு பதிலாக பாரதியை மனு தாக்கல் செய்யுமாறு நாங்கள் கூறினோம். தற்போதைக்கு பாரதியே பகுஜன் சமாஜின் அதிகாரப்பூர்வ வேட்பாளர். என்றாலும் கட்சித் தலைமையிடம் பேசி ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.
இப்பிரச்சினையில் கீர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகை யில், “இது காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மீரா அக்காவின் சதி வேலை. இந்தப் பிரச்சினையை நீதிமன்றம் வரை எடுத்துச் செல்வேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago