ஆந்திராவில் நடந்த சிஐஐ மாநாட்டில் ரூ.10.5 லட்சம் கோடி முதலீடு: 22 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலத்தில் 2 நாட்களாக நடைபெற்ற சிஐஐ மாநாட்டில், ரூ. 10.5 லட்சம் கோடி முதலீடு செய்து தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

விசாகப்பட்டினத்தில் நடை பெற்று வரும் சிஐஐ மாநாட்டின் 2-வது நாளான நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

ஆந்திராவில் தொழில் தொடங்க உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பல வெளிநாட்டு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன. 24 மணி நேர தடையில்லா மின்சாரம், சாலை, கப்பல், விமான போக்குவரத்து வசதி களே இதற்குக் காரணம். கடந்த 2 நாட்களில் மொத்தம் 665 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

வெளிநாடுகளைச் சேர்ந்த 8 அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதன்மூலம் ரூ. 10.54 லட்சம் கோடியை முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதனால் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோல புதிய தலைநகரமாக உருவாகி வரும் அமராவதியில் தொழில் தொடங்கவும் பல நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இங்கு தொழில் தொடங்க 64 நிறுவனங் களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ. 1,24,532 கோடி முதலீடு செய்யப்படும். வரும் 2022-ம் ஆண்டில் நாட்டிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலங்கள பட்டியலில் முதல் 3 இடங்களை ஆந்திரா பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திர ஆளுநர் நரசிம்மன் மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்