ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வு: பாரதிய ஜனதா அவசரக் கூட்டம் - பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

ஹரியாணா மாநிலத்தில் அக்டோபர் மாதம் 15ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அங்குள்ள 90 தொகுதிகளுக்கான வேட்பா ளர்களை முடிவு செய்ய பாரதிய ஜனதா கட்சி அவசரக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைப்பெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார்.

ஹரியாணாவில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஏற்கெனவே 43 தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. இந்நிலையில் மீதமுள்ள 47 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்ய இந்த அவசரக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்துக்கு பாஜக தலைவர் அமித் ஷா தலைமை வகித்தார். உடன் மத்திய அமைச் சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தவிர, கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலரும் கூட்டத்தின்போது உடனிருந்தனர். இதுவரை அறிவிக்கப்பட்ட வேட் பாளர்களில் 7 பெண்கள் மற்றும் 11 இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE