திருப்பதியில் தினமும் தயாராகும் 4 லட்சம் லட்டுகள்

By என்.மகேஷ் குமார்

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக தினமும் சுமார் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

திருப்பதி ஏழுலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற் றதாகும். சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும், கால்நடையாக திருமலைக்கு வரும் பக்தர்க ளுக்கும் லட்டு பிரசாதம் இலவச மாக வழங்கப்படுகிறது. ஆனாலும், லட்டு பிரசாதத்தை பணம் கொடுத்து வாங்குவதற்கும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்தி ருப்பது இதன் தனித்தன்மையைக் காட்டுகிறது.

திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் லட்டு உட்பட பல்வேறு பிரசாதங்கள் நைவேத்தியமாக படைக்கப்படுகின்றன. ஆனால் லட்டு பிரசாதத்திற்குதான் பக்தர்க ளிடையே அதிக வரவேற்பு உள்ளது. பல்லவ அரசர்கள் காலத்தில்தான் திருப்பதி ஏழுமலை யானுக்கு விதவித மான பிரசாதங்கள் நைவேத்தியமாக படைத்து வழிபடத் தொடங்கினர் என கல்வெட்டுகள் தெரிவிக் கின்றன.

ஸ்ரீகிருஷ்ண தேவராயர் காலத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள் ளது. கடந்த 1803-ம் ஆண்டு முதல் அப்போதைய மெட்ராஸ் மாகாண அரசு, திருப்பதி ஏழுமலையானின் பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்பனை செய்வதைத் தொடங்கி வைத்தது.

முதலில் பூந்திதான் ஏழுமலை யானின் பிரசாதமாக விநியோகிக் கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 1940-ம் ஆண்டில் லட்டு பிரசாதம் விற்பனை தொடங்கப்பட்டது.

திருப்பதியில் 5,100 லட்டுகள் தயாரிக்க 185 கிலோ பசு நெய், 200 கிலோ கடலை மாவு, 400 கிலோ சக்கரை, 35 கிலோ முந்திரி, 17.5 கிலோ உலர் திராட்சை, 10 கிலோ கற்கண்டு, 5 கிலோ ஏலக்காய் பயன்படுத்தப்படுகின்றன. 5ஆண்டு களுக்கு முன்பு தினமும் 1 லட்சம் லட்டுகள் மட்டுமே தயாரிக் கப்பட்டன. ஆனால் இப்போது நவீன இயந்திரங்கள் மூலம் தினமும் 3 லட்சம் முதல் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

கல்யாண உற்சவ லட்டு, சாதரண லட்டு என லட்டு பிரசாதம் 2 வகையாக அழைக்கப்படுகின்றன. இதில் ரூ.100-க்கு சிபாரிசின் பேரில் வழங்கப்படும் கல்யாண உற்சவ லட்டு 750 கிராம் எடை கொண்டதாகும். ரூ.25க்கு பக்தர் களுக்கு வழங்கப்படும் சாதாரண லட்டு 140 முதல்170 கிராம் எடை கொண்டதாகும்.

திருமலையில் மலர் கண்காட்சி தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலையில் கல்யாண வேதிகா எனும் இடத்தில் மலர் கண்காட்சியை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இதில் தேவஸ்தானத்தின் தோட்டக்கலை, மக்கள் தொடர்பு, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், காய்கனிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட லட்சுமி, ராம சேது சமுத்திரம் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன. முதன்முறையாக மணல் சிற்பங்களும் கண்காட்சியில் அமைக்கப்பட் டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்0பு திருமலையில் அறிமுகம் செய்யப்பட்ட அன்னதானம், போக்குவரத்து வசதிகள், ஏழு மலையானின் நகைகள், முக்கிய பிரமுகர்கள் திருமலைக்கு வந்த காட்சிகள் உள்ளிட்ட அரிய புகைப் படங்களும் இதில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்