எம்எல்ஏ-வை மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொன்ற விவகாரம்; இது காவல் துறையின் தோல்விதான்: ஆந்திர மாநில டிஜிபி ஆர்.பி.தாக்குர் ஒப்புதல்

By என்.மகேஷ் குமார்

விசாகப்பட்டினத்தில் எம்.எல்.ஏ மற்றும் மாஜி எம்.எல்.ஏவை மாவோயிஸ்ட்கள் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றுள்ளது வேதனை அளிக்கிறது. ஒடிசா-ஆந்திரா மாநில போலீஸார் இடையே சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாததே இதற்கு காரணம். இது காவல் துறையின் தோல்விதான் என்று நேற்று விசாகப்பட்டினத்தில் சாட்சிகளிடம் நேரில் விசாரணை நடத்திய ஆந்திர காவல் துறை டிஜிபி ஆர்.பி. தாக்குர் கூறினார்.

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி காரில் சென்று கொண்டிருந்த ஆளும் தெலுங்கு தேச கட்சியின் அரக்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் கிட்டாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிவேரி சோமா ஆகிய இருவரை ஒரு மலைப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் சுற்றுவளைத்து சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில போலீஸ் துறையை உலுக்கி போட்டுள்ளது.

ரூ. 42 லட்சம் இழப்பீடு

மக்கள் பிரதிநிதிகளை பட்டப் பகலில் மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்வதா? என இரு மாநிலங்களி லும் காவல் துறை மற்றும் அரசி யல்வாதிகளிடையே பெரும் விவா தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் உயிரிழந்த எம்.எல்.ஏ கிட்டாரி சர் வேஸ்வர ராவின் குடும்பத் துக்கு ஆந்திர அரசு சார்பில் ரூ. 42 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட உள்ளது.

மேலும், இவரின் குடும்பத் தார் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதேபோன்று, இந்த சம்பவத் தில் உயிரிழந்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சிவேரி சோமாவின் குடும்பத்தா ருக்கு ரூ. 12 லட்சம் வழங்க உள்ள தாக ஆந்திர அரசு அறிவித்துள் ளது. இதுவரை இருவர் கொல்லப் பட்டதற்கான காரணங்களை மாவோ யிஸ்ட்கள் வெளியிடவில்லை.

இந்நிலையில், நேற்று அப்பகு திக்கு ஆந்திர மாநில போலீஸ் டிஜிபி ஆர்.பி. தாக்குர் சென்று, சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் சில சாட்சியினரிடம் விசாரணை நடத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசிய தாவது: எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவை மாவோயிஸ்ட்கள் கொலை செய்தது வருந்தத்தக்க சம்பவம். இதில் சில முக்கிய ஆதா ரங்கள் கிடைத்துள்ளன. கொலை செய்தவர்களை பிடிக்க தனி போலீஸ் படையும் அமைக்கப்பட் டுள்ளது. ஆந்திரா-ஒடிசா மாநில காவல் துறையில் மாவோயிஸ்ட் களின் நடமாட்டம் குறித்து சரிவர தகவல் பரிமாற்றங்கள் இல்லை என்பது உண்மை.

இதனாலும் கூட இந்த சம்பவம் நடந்திருக்கலாம். இது காவல் துறையின் தோல்விதான். இனி இதுபோன்று நடக்காமல் இருக்க மத்திய அரசு, மாநில அரசு மற்றும் ஒடிசா அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

கடந்த சில மாதங் களுக்கு முன்னர், ராம்கூடா பகுதி யில் நடந்த என்கவுன்ட்டரில் பல மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்ட னர். இதற்கு பழி வாங்கும் விதமாக தற்போது இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். ராம்கூடா சம்பவத் துக்கு பின்னர், 7 முறை போலீஸாரை கொல்ல மாவோயிஸ்ட்கள் முயற் சித்துள்ளனர். ஒடிசா மாநிலத் தின் வனப்பகுதிகளில் மாவோ யிஸ்ட்கள் கூடாரம் அமைத்து இந்த கொடிய செயலை புரிந்துள்ளனர். கொலையாளிகளை இந்த இரு மாநில எல்லை பகுதிகளில் தீவிரமாகத் தேடி வருகிறோம். இவ்வாறு டிஜிபி ஆர்.பி. தாக்குர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்