பிரம்மோற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சன சேவை

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயி லில் இம்முறை 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளன. இதில் முதலாவதாக வரும் 13-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் 2-வது பிரம் மோற்சவ விழா, நவராத்திரி பிரம் மோற்சவமாக அக்டோபர் மாதம் 10-ம் தேதி துவங்கி 18-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்று 2 பிரம் மோற்சவ விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

முதல் பிரம்மோற்சவத்தை யொட்டி 13-ம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. அன்றைய தினம், ஆந்திர அரசு சார்பில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை ஏழு மலையானுக்கு காணிக்கையாக அளிக்க உள்ளார். பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு, ஆகம சாஸ்திரத்தின் படி, இன்று மூலவர் சன்னதி உட்பட தங்க கொடி மரம், பலி பீடம், கோயிலுக்குள் உள்ள சன்னதிகள் என அனைத்தும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதனையே கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்றழைக்கின்றனர்.

இதனை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சர்வ தரிசனம் மூலம் சுவாமியை தரிசனம் செய்ய அனு மதிக்கப்பட உள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை புதன்கிழமை அங்குரார்பண நிகழ்ச்சிகள் நடத் தப்பட உள்ளது. இதில், ஏழுமலை யானின் மெய்காப்பாளார் மற்றும் சேனாதிபதியான விஸ்வகேசவர் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி யளிப்பார்.

இதனைத் தொடர்ந்து புற்றில் இருந்து மண் எடுத்து அங்குரார்பண நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பின்னர், 13-ம் தேதி கோயிலில் உள்ள தங்க கொடி கம்பத்தில் கருட சின்னம் பொறித்த கொடி ஏற்றி பிரம்மோற்சவம் தொடங்கப்படும். 13-ம் தேதி இரவு, பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

மேலும்