தன்பாலின உறவு குற்றமில்லை என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ள நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, "இந்தத் தீர்ப்பால் இனிமேல் எச்ஐவி நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிசி 377ன்படி தன்பாலின உறவு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்ட நிலையில், அதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்தன. அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று அளித்த தீர்ப்பில் தன்பாலின உறவு குற்றமில்லை என்று தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
தன்பாலின உறவு குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எனக்கு வேதனையளிக்கிறது. இந்தத் தீர்ப்பு இறுதியானது அல்ல, 7-பேர் கொண்ட அரசியல்சாசன அமர்விடம் இந்த வழக்கை எடுத்துச் செல்வேன்.
தன்பாலின உறவு குற்றமில்லை என்ற தீர்ப்பினால், சமூகத்தில் இனிமேல் குற்றங்கள் அதிகரிக்கும். பாலுறவு மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும், குறிப்பாக எச்ஐவி நோய்கள்அதிகமாக பரவும்.
தன்பாலின உறவு என்பது என்னைப் பொறுத்தவரை மரபணுரீதியான ஒரு குறைபாடாகும். இதுபோன்ற பாதிப்பில் சிக்கியவர்களை இயல்பான பாலுறவு வைத்துக்கொள்ளும் மனிதர்களுடன் ஒப்பிடக் கூடாது, ஒப்பிடவும் முடியாது.
தன்பாலின உறவுக் கலாச்சாரம் என்பது இந்தியக் கலாச்சாரம் அல்ல.அது அமெரிக்கக் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரத்துக்கு பின்புலத்தில் கோடிக்கணக்கான பணம் புழங்குகிறது. அமெரிக்கர்களும், அமெரிக்க நிறுவனங்களும் இந்தியாவில் தன்பாலின பார்களை உருவாக்க நினைக்கிறார்கள். இதன் மூலம் நாட்டின் பாரம்பரியம் கெடும், நாட்டின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் உருவாகும். இது இந்துத்துவாவுக்கு எதிரானது, நம்முடைய பழங்கால முறைக்கும், பழக்கத்துக்கும் எதிரானது. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் அருண் குமார் ட்விட்டரில் கூறுகையில்,"உச்ச நீதிமன்றத்தின் தீரப்பைப் போல், நாங்கள் தன்பாலின உறவை குற்றமாகக் கருதவில்லை. அதேசமயம், ஒரே பாலினத்தில் செய்யப்படும் திருமணம், உறவுகள் இயற்கையானதும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல. அதனால்தான் இதுபோன்ற உறவுகளை நாங்கள் ஆதரிப்பது இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago