ஒடிசாவில் ட்ரோன் கேமராக்கள் வழியாக நக்சல் நடமாட்டம் கண்காணிப்பு: டிஜிபி தகவல்

By ஏஎன்ஐ

ஒடிசா மாநிலத்தில், நக்சல் தீவிரவாதிகளால் கடுமையான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க, ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக டிஜிபி ராஜேந்திர பிரசாத் ஷர்மா தெரிவித்தார்.

இதுகுறித்து டிஜிபி ஷர்மா ஏஎன்ஐயிடம் தெரிவித்ததாவது:

''ஒடிசாவின் மால்காங்கிரி மற்றும் கோராபுட் ஆகிய மாவட்டங்களில் நக்சல் நடமாட்டம் அதிகமாக உள்ளது.  ட்ரோன் கேமராக்கள் வழியாக நக்சல் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிய திட்டமிட்டுள்ளோம்.

மாநிலம் முழுவதும் பயன்படுத்தத் திட்டமிருந்தாலும் முதல் கட்டமாக  நக்சல் தீவிரவாதிகளால் கடுமையான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க ட்ரோன் கேமராக்கள்  கொள்முதல் செய்யப்படும். இதற்காக முதற்கட்டமாக இந்த நிதி ஆண்டில் ஓரளவுக்கு ட்ரோன்கள் வாங்குகிறோம்.

இது தவிர, புவனேஸ்வரில் நவம்பர் 28லிருந்து டிசம்பவர் 16 வரை ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை விளையாட்டுப் போட்டிக்காக சில ட்ரோன் கேமராக்கள் வாங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

ஆரம்பத்தில் இரவு நேரங்களில் குறைந்தது 60 நிமிடங்கள் படம் பிடிக்கும் ட்ரோன்கள் காவல்துறைக்கு வழங்கப்பட உள்ளன.''

இவ்வாறு டிஜிபி ராஜேந்திர பிரசாத் ஷர்மா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்