தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவுக்கு அம் மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் காரர் ஒருவர் கோயில் கட்டி யுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நல் கொண்டா மாவட்டத்தில் உள்ள நிதமனூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாசுலு. இவர், சவுட்டப்பல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், டிஆர்எஸ் கட்சி தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே. சந்திரசேகர ராவின் தீவிர ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் சந்திரசேகர ராவ் மீதுள்ள பற்றின் காரணமாக, அவருக்கு கோயில் எழுப்ப ஸ்ரீநிவாசுலு முடிவு செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமது சொந்த ஊரான நிதமனூரு கிராமத்தில் தனது விவசாய நிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு ரூ.2 லட்சம் செலவில் ஸ்ரீநிவாசுலு கோயில் கட்டியுள்ளார். அங்கு அவரது சிலையும் வைக்கப்பட்டிருக்கிறது.
தனது கிராமத்துக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் பிரச்சாரத்துக்காக வருகை தரும்போது, இக்கோயிலின் திறப்பு விழாவை நடத்த வேண்டும் என ஸ்ரீநிவாசுலு காத்துக் கொண்டிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
41 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago