ஒரு கிராமத்துக்கே தண்ணீர் வழங்கும் குளத்தை வெட்டிய மனிதன்: தாத்தாவின் கனவை நிறைவேற்றிவிட்டதாக பெருமிதம்

By ஏஎன்ஐ

கிராம மக்களின் தேவைக்காக 50 மீட்டர் நீள அகலத்தில் குளத்தை தனியாளாக வெட்டி தாத்தாவின் ஆசையை ஒரு பேரன் பூர்த்தி செய்துள்ள சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. இதனால் உள்ளூர் விவசாயிகள் மட்டுமல்ல சுற்று வட்டார மக்களும் பயனடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தாண்டேவாடா மாவட்டத்தைச் சேர்ந்த சின்னஞ்சிறு கிராமம் கடாபல். இந்த கிராமத்துக்கு அருகே ஒரு ஆறு செல்கிறது. ஆனால் அதன் நீராதாரம் கிராமங்களுக்கு கிடைப்பதற்கான பாசன வசதிகள் இல்லை என்பதுதான் இவர்களின் சோகம்.

இதுகுறித்து லிங்காரம் மாண்டவி தெரிவிக்கையில்,

என்னுடைய தாத்தா சில பத்தாண்டுகளுக்கு முன் எங்கள் ஊருக்கு ஆற்றுத்தண்ணீர் வருவதாக ஒரு கனவு கண்டார். ஆனால் அந்த ஆசை அவரைப் பொறுத்தவரை நிராசையாகி விட்டது. காரணம் இதற்காக எந்த அதிகாரிகளும் எங்கள் கிராம மக்களுக்கு உதவத் தயாராக இல்லை. இதை இளம் வயதிலேயே அறிந்திருந்த நான் கடந்த பத்தாண்டுகளாக இதற்கான முயற்சியை மேற்கொண்டேன். தனியாளாகவே நின்று ஒரு 50 மீட்டர் நீள அகலத்தில் ஒரு குளத்தை வெட்டினேன். அதாவது 2500 மீட்டர் பரப்பளவு.

நீர்வரத்துக்காக துவாலி கர்கா ஆற்றில் இருந்து இக்குளம் வரை ஒரு பாசன கால்வாயை 400 மீட்டர் நீளத்தில் வெட்டிக்கொண்டுவந்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இதைப் பற்றி எந்தத் தகவலும் தங்களுக்கு வரவில்லை என்று மாவட்ட ஆட்சியர் சவுராப் குமார் தெரிவித்தார். ''நீங்கள் கூறும் இத்தகவலை சரிபார்க்க வேண்டும். பின்னர் நிச்சயம் அவருக்கு உதவ கடமைப்பட்டுள்ளோம்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்