திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில், ஆகம சாஸ்திரங்களின்படி, நேற்று கோயிலை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியான ‘கோயில் ஆழ்வார் திருமஞ்சன சேவை’ வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு, நேற்று காலை, மூலவர் சன்னதி உட்பட கொடி கம்பம், பலி பீடம், மற்றும் கோயிலுக்குள் உள்ள சிறிய சன்னதிகள் அனைத்தும் குங்குமம், சந்தனம், பன்னீர், பச்சை கற்பூரம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சுத்தம் செய்தனர். மேலும், தங்க விமான கோபுரம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதனால், காலை நடைபெற இருந்த அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. பக்தர்களும் திருமஞ்சன சேவை நடந்த பின்னர் நேற்று காலை 11 மணிக்கு பின்னர் சர்வ தரிசனம் மூலம் அனுமதிக்கப்பட்டனர்.
பிரம்மோற்சவ விழாவினை யொட்டி, இன்று ஏழுமலையான் கோயிலில் ஆகம சாஸ்திரங் களின்படி, அங்குரார்பண நிகழ்ச்சி கள் நடத்தப்பட உள்ளன. இதனை முன்னிட்டு, இன்று காலை ஏழு மலையானின் சேனாதிபதியான விஸ்வகேசவர் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர், புற்றில் இருந்து புனித மண் கொண்டு வந்து அங்குரார்பண நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பிரம்மோற்சவ விழா நாளை தொடங்கப்படுவதை முன்னிட்டு, திருமலை முழுவதும் வண்ணமிகு விளக்கு அலங்காரத்தால் விழாக் கோலம் பூண்டுள்ளது. திருமலை முழுவதும், மின் விளக்கு அலங் காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்குள் தங்கக் கொடி கம்பம், பலிபீடம் ஆகியவை பலவித வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோயில் முழுவதும் பூக்கள், தாழம் பூக்களால் அலங்காரம் செய்யப் பட்டுள்ளது. மேலும், திருமலை யில் பல இடங்களில் அலங் கார வளைவுகள் பக்தர்களை வரவேற்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago