மகாராஷ்டிரத்தில் சட்டமன்ற தேர்தலுக்குப் பின், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (என்சிபி) கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம் என்று பாஜக கூறியுள்ளது.
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் இடையிலான 15 ஆண்டுகால கூட்டணி முடிவுக்கு வந்தது. இதே காரணத்தின் அடிப்படையில் 25 ஆண்டு கால சிவசேனா பாஜக கூட்டணியும் நேற்று முன்தினம் முறிந்தது.
இந்நிலையில், “தேர்தலுக்குப் பின் தேசியவாத காங்கிரஸுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என மும்பையில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பாஜக பொதுச் செயலாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, “இந்தக் கேள்விக்கே இடமில்லை. தேர்லுக்குப் பின் எங்களுக்கு கூட்டணி அமைக்கும் அவசியம் இருக்காது. நாங்கள் தனித்தே ஆட்சி அமைப்போம். மாநிலத்தில் நிலவும் குழப்பங்களுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளே காரணம். தேர்தலுக்குப் பின் இவ்விரு கட்சிகளும் காணாமல் போய்விடும். பிரதமர் மோடி அக்டோபர் 3-ம் தேதிக்குப் பிறகு இங்கு பிரச்சாரம் செய்யும் வாய்ப்புள்ளது. சிவசேனாவுடன் கூட்டணி முறிவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மகாராஷ்டிரம் இத்தேர்தலில் 5 முனைப் போட்டியை சந்திக்கிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago