மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அடுத்த மாதம் 15-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து காங்கிரஸுக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் வாபஸ் பெற்றது. இதையடுத்து காங்கிரஸை சேர்ந்த முதல்வர் பிருதிவிராஜ் சவாண், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இதுபற்றி விவாதித்த மத்திய அமைச்சரவை, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தது. இதற்கான கோப்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று கையெழுத்திட்டார். இதையடுத்து மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago