ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளைப் பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக புதிய மனுத் தாக்கல் செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
எழுவரை விடுதலை செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் மனுவோடு இதனைப் பார்க்க முடியாது எனவும் ராஜீவ் படுகொலை சம்பவத்தில் உடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எழுவர் விடுதலையை எதிர்க்கும் மனு தனியே தாக்கல் செய்யவேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மே 1991-ல், ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற ஒரு தேர்தல் பேரணியில் கொல்லப்பட்டார். உடன் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
ராஜீவ் கொலை வழக்கில் கைதான நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பியாஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் 27 வருடங்களாக தங்கள் வாழ்க்கையை சிறையிலேயே கழித்துவிட்டனர். எனவே அவர்களை விடுதலை செய்யும்படி முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு செப்டம்பர் 9-ம் தேதி முடிவு செய்தது.
ராஜீவ் படுகொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து, மாநில அரசாங்கத்தின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதலை வழங்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று, ஆளுநர் தமிழக அரசின் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்ததாகக் கூறப்படுவதை மறுத்தார்.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ''இப்பிரச்சினை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு குறிப்பு எதுவும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. இவ்வழக்கு சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியலமைப்பு சார்ந்தும் சிக்கலான ஒன்றாகும்'' என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக மக்கள் விருப்பம்
இதற்கிடையில், அமைச்சர், டி.ஜெயக்குமார், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழுபேரை விடுதலை செய்யவேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம். அதைத்தான் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இதனை ஆளுநர் ஏற்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனிடையே ராஜீவ் படுகொலை சம்பவத்தில் உடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எழுவர் விடுதலை குறித்த தமிழக அரசின் பரிந்துரையை ஏற்கக்கூடாது, எழுவரை விடுதலை செய்யக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், எழுவரை விடுதலை செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் மனுவோடு இதனைப் பார்க்க முடியாது எனவும், ராஜீவ் படுகொலை சம்பவத்தில் உடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எழுவர் விடுதலையை எதிர்க்கும் மனு தனியே தாக்கல் செய்யவேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago