ராணுவ வீரர் உயிர்த் தியாகம் செய்யும்போது இரவுகளில் உறக்கம் வருவதில்லை: ராஜ்நாத் சிங்

By ஏஎன்ஐ

 

எப்போதெல்லாம் ஒரு ராணுவ வீரர் கொல்லப்படுகிறாரோ, அப்போதெல்லாம் இரவுகள் உறக்கம் அற்றவையாக இருக்கின்றன என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லக்னோவில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்நாத், ''சமீபத்தில் நம் எல்லைப் பாதுகாப்பு வீரர் ஒருவர், பாகிஸ்தான் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். இது மக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அத்தகைய சம்பவங்கள் நடைபெறும்போது இரவில் தூக்கம் வருவதில்லை. நம்முடைய வீரர்கள் நாட்டின் பெருமை'' என்றார்.

சில தினங்களுக்கு முன்னால் இந்திய வீரர் ஒருவர் பாகிஸ்தானியப் படைகளால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

சர்வதேச எல்லையான ராம்கர் பகுதியில் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் நரேந்தர் குமார். அவரைப் பாகிஸ்தான் வீரர்கள் அடித்து உதைத்து, அவரது தொண்டைப் பகுதியை கத்தியால் அறுத்து கொடூரமாகக் கொலை செய்தனர்.

இறந்தவரின் உடலைத் துப்பாக்கி குண்டுகளால் துளைத்தவர்கள், அவரது உடலை இந்திய பகுதிக்குள் வீசினர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.நரேந்தர் குமாரின் மகன், தன்னுடைய குடும்பத்துக்கு உதவிகள் வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்