மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு தெலங்கானா மேலவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதில், வாஜ்பாய்க்கு ஹைதராபாத்தில் விரைவில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளதாக முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
தெலங்கானாவில் சட்டப் பேரவை கலைக்கப்பட்ட பின்னர், நேற்று மேலவை கூட்டம் நடை பெற்றது. இதில் அண்மையில் காலமான திமுக தலைவர் கருணா நிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மற்றும் பிரபல மிமிக்ரி கலைஞர் வேணுமாதவ் ஆகிய நால்வருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பேசியதாவது:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒரு பன்முகக் கலைஞர். அவரது பேச்சு, கவிதை, எழுத்தாற்றலை கண்டு வியந்திருக்கிறேன். தமது ஆட்சிக்காலத்தின்போது, துணிச்சலாக அணு சோத னையை நிறைவேற்றியவர். ஹைதராபாத்துக்கும், வாஜ் பாய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால், அவருக்கு ஹைதராபாத்தில் ஒரு ஏக்கரில் மணி மண்டபம் கட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இதற் கான இடமும் தேர்வு செய்யப் பட்டுவிட்டது. இந்த மணி மண்டபத் தில் வாஜ்பாயின் நினைவுத் தூணும், அவரது சிலையும் நிறுவப்படும். இவ்வாறு முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago