காலை உடைத்து விடுவேன்- மேற்கு வங்கத்தில் பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை: வைரலாகும் வீடியோ

By ஏஎன்ஐ

 ''உங்கள் காலை உடைத்து, ஊன்றுகோலை என்னால் கொடுக்கமுடியும்'' என்று மாற்றுத் திறனாளிகளுக்கென நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தின் அசான்சோல் பகுதியில் செவ்வாய்க்கிழமை அன்று மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் பிற உபகரணங்களும் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மத்திய பாஜக அமைச்சர் பாபுல் சுப்ரியோ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த பாபுல் அங்குமிங்கும் சென்றுகொண்டிருந்த ஒருவரைக் கண்டு கோபமடைந்தார். அப்போது பேசிய அவர், ''ஏன் நடந்துகொண்டே இருக்கிறீர்கள்? தயவு செய்து உட்காருங்கள்'' என்றார். மீண்டும் நகர்ந்த அவரைப் பார்த்து, ''என்ன ஆயிற்று உங்களுக்கு, ஏதாவது பிரச்சினையா? உங்களின் ஒருகாலை உடைத்து, ஊன்றுகோலைத் தர முடியும்'' என்றார்.

பின்பு தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேசிய அவர், ''அந்த மனிதர் தன்னுடைய இடத்தில் இருந்து நகர்ந்தால், அவரின் காலை உடைத்து ஊன்றுகோலைக் கொடுங்கள்'' என்றார். மீண்டும் பேசிய பாபுல், ''அந்த மனிதருக்காக பார்வையாளர்கள் அனைவரும் கை தட்டுங்கள்'' என்றார். இதைத் தொடர்ந்து பார்வையாளர்களின் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.

 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளதால், சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாபுல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்