ஹெடிஎப்சி வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சங்வி புதன்கிழமை அன்று காணாமல் போனார். காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு ரத்தக் கறையுடன் கூடிய அவரின் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ''வழக்கம்போல செப்.5-ம் தேதி காலை 8.30 மணிக்கு மலபார் ஹில்லில் உள்ள தனது வீட்டில் இருந்து சித்தார்த் அலுவலகத்துக்குக் கிளம்பியுள்ளார். மும்பை கமலா மில்லில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து மாலை 7.30 மணிக்குக் கிளம்பியுள்ளார்.
ஆனால் அவர் காரில் வீடு திரும்பும் காட்சி, கமலா மில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகவில்லை. காவல்துறை விசாரணையில் சித்தார்த்தின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதும், அவர் கடைசியாகப் பேசியபோது செல்போன் இருந்த இடம் கமலா மில்லில் உள்ள அவரின் அலுவலகம் என்பதும் தெரியவந்துள்ளது.
வியாழக்கிழமை மாலை 11-வது செக்டாரில் ஒரு கார் அனாதையாக நின்றுள்ளது. அதைத் திறந்து சோதனை மேற்கொள்ளும்போது, அது சித்தார்த்தின் கார் என்பது தெரியவந்துள்ளது. காரின் சீட்டில் ரத்தக் கறைகள் இருந்தன. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.
என்.எம்.ஜோஷி மார்க் காவல் நிலைய அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago