திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8-ம் நாள் விழா கோலாகலம்; திருத்தேரில் பவனி வந்த உற்சவ மூர்த்திகள்- திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளான நேற்று காலை, உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளான நேற்று காலை, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மகா ரதத்தில், உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் எழுந்தருளினார். அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள், ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்த கோஷத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் தேரின் மீதுள்ள உற்சவருக்கு ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர். மேலும் சிலர், தேரின் மீது மிளகு, உப்பு போன்றவற்றை தெளித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காளை, குதிரை, யானை போன்ற பரிவாரங்கள் முன்னே செல்ல, இவைகளைத் தொடர்ந்து ஜீயர் குழுவினர் வேத பாராயணம் செய்தவாறு பின் தொடர்ந்தனர். இவர்களைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பஜனை கோஷ்டியினர் மற்றும் நடன கலைஞர்கள் நடனமாடியபடி சென்றனர். இதனைத் தொடர்ந்து நேற்றிரவு குதிரை வாகனத்தில் உற்சவரான மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவினில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு, மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை கோயிலின் அருகே உள்ள தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக தெப்பக்குளம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. சக்கர ஸ்நானத்தை தொடர்ந்து மாலை ஊஞ்சல் சேவை நடை

பெறும். இதனைத் தொடர்ந்து இரவு பிரம்மோற்சவத்திற்கான கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இத்துடன் வருடாந்திர பிரம்மோற்

சவம் நிறைவடைகிறது. அடுத்த மாதம் 10-ம் தேதி, நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கி, 18-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது.

நேற்று திருமலையில், தேவஸ்தான கல்யாண கட்டாவின் துணை நிர்வாக அதிகாரி நாகரத்னா கூறுகையில், ‘‘கடந்த 13-ம் தேதி பிரம்மோற்சவம் தொடங்கிய நாளில் இருந்து நேற்று வரை மொத்தம் 8 நாட்களில் மட்டும் 1.9 லட்சம் பக்தர்கள் சுவாமிக்கு தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். மொத்தம் 1,397 சவரத் தொழிலாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றினர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்