தெலங்கானாவில் நடைபெறவுள்ள தேர்தலில் தனக்கு வாக்களிப்பதாக கோயிலில் சத்தியம் செய்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என மகளிர் சுய உதவிக் குழுவினருடன் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி வேட்பாளர் பேரம் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் பதவிக் காலம் முடிவதற்கு 9 மாதத்துக்கு முன்பே சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரானார் முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர ராவ். மொத்தம் உள்ள 119-ல் 105 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். இதையடுத்து, வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.
குறிப்பாக,சில வேட்பாளர்கள் மசூதிகள், தேவாலயங்கள், கோயில்கள் உள்ளிட்டவற்றில் ஒரு பிரிவினரை அழைத்து, தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென சத்தியம் வாங்கிக் கொள்வதாகவும் இதற்கு பிரதி பலனாக பல லட்சம் கொடுக்கப்படும் என உறுதி அளிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதில் காமாரெட்டி மாவட்டம், எல்லாரெட்டி தொகுதி டிஆர்எஸ் கட்சி வேட்பாளரான ரவீந்தர் ரெட்டி, மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஓட்டுக்குபேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில், “50 பேர் கொண்ட மகளிர் சுய உதவிக் குழுவினர், எனக்கு வாக்களிப்பதாக ஏதாவது ஒரு கோயிலில் சத்தியம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், அந்தக் குழுவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்” எனக் கூறுகிறார்.
இதற்கு அந்த மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண், “அந்த ரூ.5 லட்சத்தை வைத்து நாங்கள் என்ன செய்வது? இது போதாது” எனக் கூறுகிறார். இதையடுத்து, “அண்ணன் வெற்றி பெற்றால் கூடுதல் தொகை கொடுப்பார்” என ரவீந்தர் ரெட்டியின் உதவியாளர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது ரவீந்தர் ரெட்டிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இந்த தகவலை அறிந்த மாநில தேர்தல் அதிகாரி ரஜத் குமார், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காமாரெட்டி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கையை மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பதுடன், அதன் ஆலோசனை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரஜத் குமார் கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் இதே தொகுதியில் டிஆர்எஸ் சார்பில் போட்டியிட்ட ரவீந்தர் ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுரேந்தரைவிட 24 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.எல்லாரெட்டி தொகுதியில் பிரச்சாரம் செய்தவாறு மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் வாக்கு சேகரிக்கும் டிஆர்எஸ் கட்சி வேட்பாளர் ரவீந்தர் ரெட்டி.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago