கைது வாரன்ட் விவகாரம்: நீதிமன்றத்தில் சந்திரபாபு கட்டாயம் ஆஜராக வேண்டும்- மகாராஷ்டிரா நீதிமன்றம் உத்தரவு

By என்.மகேஷ் குமார்

மகாராஷ்டிராவில் உள்ள பாப்ளி அணைக்கட்டு விவகாரத் தில் 8 ஆண்டுகளுக்கு முன் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, மகாராஷ்டிர மாநிலம், தர்மாபாத் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவராத பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தது. இதில் நேற்று மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆஜராகாமல் தனது வழக்கறிஞர் மூலம் பிடிவாரன்டை ரத்து செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், இதனை ஏற்க தர்மாபாத் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும், முதல்வரே ஆயினும் கட்டாயமாக நீதிக்கு முன் அனை வரும் சமம் என்றும், கண்டிப்பாக வரும் அக்டோபர் மாதம் 15-ம் தேதி சந்திரபாபு நாயுடு நேரில் ஆஜராக வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு உட்பட 16-பேர் தர்மா பாத் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால், தெலங்கானாவைச் சேர்ந்த கமலா கர், பிரகாஷ் கவுட், ரத்தினம் ஆகிய 3 பேர் மட்டுமே தங்களது பிடிவாரன்டை ரத்து செய்ய வேண்டுமென நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்தனர். இவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து, இவர்களது பிடிவாரன்டை தர்மாபாத் நீதிமன்றம் ரத்து செய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்