வளைகாப்பு நடத்துவதாக அழைத்துச் சென்ற பெற்றோர் மனைவியை அனுப்பாததால் கணவர் தற்கொலை

By என்.மகேஷ் குமார்

காதல் திருமணம் செய்துகொண்ட மனைவிக்கு வளைகாப்பு நடத்துவ தாகக் கூறி அழைத்துச் சென்ற பெற்றோர், திருப்பி அனுப்பாததால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஹைதராபாத் பாத்தபஸ்தி சந்தோஷ் நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த், ஸ்ரீவர்ஷா இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருதரப்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். எனினும், ஸ்ரீகாந்த் வீட்டில் தங்கி இருந்தனர். ஆனால், ஸ்ரீவர்ஷா பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீகாந்த் மீது 12 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ஸ்ரீவர்ஷா கார்ப்பமானார்.

இதையடுத்து, ஸ்ரீவர்ஷாவுக்கு வளைகாப்பு செய்யப் போவதாகக் கூறி, அவரது பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ள னர். அதன் பிறகு பல முறை தனது மனைவியை பார்க்க அவரது வீட்டுக்குச் சென்ற ஸ்ரீகாந்துக்கு அனுமதி மறுத்துள்ளனர். இது குறித்து ஸ்ரீகாந்த் தரப்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மனமுடைந்த ஸ்ரீகாந்த், நேற்று முன்தினம் நள்ளிரவு தீக்குளித்தார். மிகவும் ஆபத்தான நிலையில், உஸ்மானியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஸ்ரீகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ஸ்ரீகாந்த் பெற்றோர் போலீஸில் புகார் செய் துள்ளனர். இதுகுறித்து பாத்த பஸ்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். தெலங்கானா மாநிலத் தில் கடந்த சில நாட்களாக பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் மீது கொலை வெறி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இது 3-வது சம்பவம் ஆகும்.

கடந்த வாரம் தலித் இளைஞரான பிரவீணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அம்ருதா. இதையடுத்து, அம்ருதாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி பிரவீணை கொலை செய்தனர். இந்நிலையில், கலப்பு திருமணம் செய்து கொண்ட அம்ருதாவுக்கு ரூ.8.25 லட்சம் பண உதவியும், 5 ஏக்கர் விவசாய நிலமும், 2 படுக்கை அறை வீடும் வழங்கப்படும் என தெலங்கானா அரசு நேற்று அறிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்