பயணச்சீட்டு மானியங்களை கைவிட மூத்த குடிமக்களிடம் பிரதமர் கோர வேண்டும்: ரயில்வே துறை யோசனை

By ஆர்.ஷபிமுன்னா

பயணச்சீட்டு மானியங்களை கைவிடப் பயணிகளிடம் கோருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு யோசனை அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே துறைக்கு தொடர்ந்து நிதிச்சுமை அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க, பலவகையான யோசனைகளை அதன் அமைச்சகம் சார்பில் பிரதமர் மோடியிடம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நூறு நாட்களுக்கு அமலாக்கும் இந்த யோசனைகளில் 11 முக்கியமானதாக உள்ளது.

இதன் மூலம், அத்துறைக்கு நிதிச்சுமை குறையும் என ரயில்வே கருதுகிறது. இந்த 11 யோசனைகளில் முக்கியமானதாக பயணச்சீட்டுக்கள் மானியத்தை கைவிடுவதும் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, 58 வயது நிறைந்த மூத்த குடிமக்களுக்கு அனைத்து வகுப்புகளிலும் அளிக்கப்பட்டு வரும் மானியத்தை கைவிடும்படி, பிரதமரே அவர்களிடம் கோருவார்.

ஏற்கனவே, இதுபோல் சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான மானியத்தை கைவிடுமாறு பிரதமர் மோடி கோரியிருந்தார். அதற்கு இணங்க, சுமார் 1.25 கோடி பேர் அரசு மானியத்தை விட்டுக் கொடுத்தது நல்ல பலனை அளித்தது.

மூத்த குடிமக்களிடம் பயணச்சீட்டு மானியத்தை கைவிட, ‘கிவ் இட் அப்’ எனும் பெயரிலான திட்டத்தை பிரதமர் முன்பும் அறிவித்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 15, 2016 முதல் மார்ச் 31, 2018 வரை அமலான இத்திட்டத்தின் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.77 கோடி வருமானம் கிடைத்திருந்தது.

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று சுமார் 40 லட்சம் பயணிகள் தம் மானியத் தொகையை விட்டுக் கொடுத்திருந்தனர். எனவே, மீண்டும் அத்திட்டத்தை பிரதமர் மோடி மூலம் அமலாக்க ரயில்துறை அவரிடம் யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய ரயில்துறை அமைச்சக வட்டாரம் கூறும்போது, ‘ரயில்வே முன்னாள் அமைச்சர் சுரேஷ் பிரபு, பயணிகளின் மானியத்தை முற்றிலும் நிறுத்த முயன்றார். அதற்கு கடும்எதிர்ப்பு கிளம்பியதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது, அதனை மீண்டும் மெல்ல அமல்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதற்கான முன்னோட்டமாக 100 நாட்கள் திட்டத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தனர்.

இதுவரையில் ரயில்வே துறைக்கு பயணச்சீட்டு விற்பனையில் 57 சதவிகித தொகை மட்டுமே கைக்கு கிடைக்கிறது. மீதம் உள்ள 43 சதவிகிதம் தொகை மானியமாக அது இழக்க வேண்டி உள்ளது. இந்த மானியத்தொகையை இழக்காமல் கைகளில் பெறுவதால் ரயில்துறையின் நிதிச்சுமை குறையும் வாய்ப்புகள் உள்ளன.

இதற்காக, ரயில் பயணிகள் பதிவு இணையதளமான ஐஆர்சிடிசியிலும் மாற்றம் செய்யவும் பிரதமருக்கான யோசனையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது பயணச்சீட்டு மூலம் 2019-20 ஆண்டுக்கு வசூலாகவிருக்கும் தொகையாக ரூ.50,000 கோடி இலக்காக உள்ளது.

பிரதமர் 100 நாட்களுக்காக மானியம் கைவிட கோரினால் அந்த இலக்கு ரூ.56,000 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் வரும் ஆகஸ்ட் முதல் அமலாகும் வாய்ப்புகள் தெரிகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்